உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதுகா மண்டப கோவிலில் மகா கும்பாபிஷேகம்

பாதுகா மண்டப கோவிலில் மகா கும்பாபிஷேகம்

மயிலாப்பூர்:ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மகாசுவாமி குரு பாதுகா மண்டப கோவிலில், நுாதன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம், நேற்று நடந்தது. மயிலாப்பூர், சிவசாமி சாலையில், காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு சந்த்ரசேகரேந்த்ர சரஸ்வதி மகாசுவாமி குரு பாதுகா மண்டப கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புணரமைப்பு பணிகள் நிறைவுபெற்று, அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடந்தன. கும்பாபிஷேக நாளான, நேற்று காலை புராணாவதி, வஸ்தரதானம், கடப்புரப்பாடு நடந்தது. பின், காலை, 11:45 மணிக்கு, கும்ப நீர் கலசங்களில் சேர்க்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 45 மண்டல அபிஷேகம் நடக்க உள்ளது. மேலும், 6ம் தேதி முதல், 24ம் தேதி வரை, ஆன்மிக கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !