இந்த வாரம் என்ன?
பிப். 3 தை 21 சனி
● சங்கடஹர சதுர்த்தி விரதம்
● பழநி முருகன் தெப்பம்
● திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
பிப். 4 தை 22 ஞாயிறு
● சுபமுகூர்த்த நாள்
● திருச்செந்தூர் முருகன் பிரதிஷ்டை தினம்
● சண்டேஸ்வர நாயனார் குருபூஜை
● கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் அனுமனுக்கு திருமஞ்சனம்
பிப். 5 தை 23 திங்கள்
● சுபமுகூர்த்த நாள்
● சங்கரன் கோயில் கோமதி அம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
● கூரத்தாழ்வார் திருநட்சத்திரம்
● செடி, கொடி வைக்க நல்ல நாள்
பிப். 6 தை 24 செவ்வாய்
● ராமேஸ்வரம் ராமநாதர் பிரமோற்ஸவம் ஆரம்பம்
● ராமநாதபுரம் முத்தாலம்மன் உற்ஸவம் ஆரம்பம்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம
பிப். 7 தை 25 புதன்
● சுபமுகூர்த்த நாள்
● ராமேஸ்வரம் ராமநாதர் கற்பக விருட்சம்
● பர்வதவர்த்தினி அம்மன் காமதேனு வாகனம்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
பிப். 8 தை 26 வியாழன்
● அஷ்டமி விரதம். பைரவருக்கு வடைமாலை சாத்தி வழிபடுதல்
● சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்
● திருநீலகண்டர் குரு பூஜை
பிப். 9 தை 27 வெள்ளி
● சங்கரன் கோவில் கோமதி அம்மன் தெப்பம்
● திருத்தணி முருகன் கிளி வாகனம்
● திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் வருஷாபிஷேகம்