உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

மாரியம்மன் கோவில்களில் பால்குட ஊர்வலம் கோலாகலம்

தாதாகப்பட்டி: சேலம், தாதகாப்பட்டி, மாரியம்மன் மற்றும் வழிவாய்க்கால் காளியம்மன் கோவில்களில், தை திருவிழா, கடந்த, 23ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 30ல், கம்பம் நடப்பட்டது. நேற்று காலை, தாதை மகளிர் மன்றம் சார்பில், பால்குட ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பெண்கள், பால்குடத்துடன், முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்து, மூலவர் மாரியம்மன், காளியம்மனுக்கு அபி?ஷகம் செய்தனர். நாளை காலை, உருளுதண்டம் மற்றும் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, அலகுகுத்துதல் மற்றும் மாவிளக்கு ஊர்வலம் நடக்கவுள்ளது. பிப்., 8 இரவு, வண்டி வேடிக்கை, 9 காலை மஞ்சள் நீராட்டு விழா, இரவு, ஊஞ்சல் உற்சவம், 10 இரவு சத்தாபரணத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !