மூலவர் பெரியவரா! உற்ஸவர் பெரியவரா!
ADDED :2849 days ago
இடக்கண் பெரிதா! வலக்கண் பெரிதா! என்றால் இரண்டும் பெரியது தான். மூலவர், உற்சவர் இரண்டுமே வழிபாட்டுக்குரியவைதான். மூலவரை வணங்கி விட்டு பிரகாரத்தை வலம் வரும்போது உற்சவர் சந்நிதிக்குச் சென்று வழிபடவேண்டும். பெருமாள் கோயில்களில் உற்ஸவரும் சந்நிதியிலேயே சேவை சாதிப்பதால் இருவரையும் ஒரே சமயத்தில் வணங்கலாம். விழாக்காலத்தில், வீதியுலா வரும் உற்ஸவரைத் தரிசிப்பது சிறப்பு.