உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் கோயிலில் மாசி மகா சிவராத்திரி விழா கொடியேற்றம்

ராமேஸ்வரம் : மாசி மகா சிவராத்திரி விழாவை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் சுவாமி ஸ்ரீசன்னதி முன் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, விழா துவங்கியது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் மாசி சிவராத்திரி, ஆடித் திருக்கல்யாண விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு மாசி சிவராத்திரி விழாவிற்காக குருக்கள் உதயகுமார் மந்திரம் முழங்க கொடி ஏற்றினார். பின் சுவாமி, பர்தவர்த்தினி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இதில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி, தக்கார் குமரன்ஸ்ரீசேதுபதி, உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகணன், ராமேஸ்வரம் கூட்டுறவு வீடு வசதி சங்க தலைவர் கே.கே.அர்ச்சுனன், பா.ஜ.க.,மாவட்ட தலைவர் முரளீதரன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் குணசேகரன், பா.ஜ.,நகர் தலைவர் ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !