மகா மாரியம்மன் கோவிலில் இன்று பொங்கல்
ADDED :2814 days ago
ஈரோடு: மகா மாரியம்மன் கோவிலில், இன்று பொங்கல் வைபவம் நடக்கிறது.ஈரோடு, சின்னசேமூர் மகா மாரியம்மன் கோவிலில், பொங்கல் விழா, கடந்த, 30ல் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, பூவோடு வைத்தல் நிகழ்ச்சி, தீர்த்தக்குட ஊர்வலம் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், இன்று காலை நடக்கிறது. மாவிளக்கு மற்றும் அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை கம்பம் எடுத்தல், உற்சவர் வீதியுலா, மஞ்சள் நீராட்டு மற்றும் மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி ஒருவாரமாக, தினமும் மூலவருக்கு அலங்காரம் செய்யப்பட்டது. வேப்பிலைக்காரி அலங்காரம், எலுமிச்சம் பழ அலங்காரம், வளையல்காரி அலங்காரம் வரிசையில், நேற்று குபேரலட்சுமி அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.