மீனாட்சி அம்மன் கோயிலில் விபத்தை தடுக்க தீயணைப்பு வாகனம்
ADDED :2812 days ago
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தீ விபத்து சம்பவங்களை தடுக்க, கிழக்கு ஆடி வீதியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மீனாட்சி அம்மன் கோயில் மேற்கு கோபுரம் முன், தீயணைப்பு மினி வாகனம் நிறுத்தி வைப்பது வழக்கம். கோயிலில் பிப்., 2 இரவு தீ விபத்து ஏற்பட்டபோது மினி வாகனம் வரவழைக்கப்பட்டது. அதில் போதுமான தண்ணீர் இல்லாததால் தீயை அணைக்க இயலாமல் போனது. இதற்கிடையே வீர வசந்தராய மண்டபத்தில் இருந்த கடைகளில், மளமளவென தீப்பிடித்து பெரும் சேதம் ஏற்பட்டது. வீர வசந்தராய மண்டபம் இடிந்து விழுந்தது. கோயிலுக்குள் வாகனங்கள் வர அனுமதியில்லை. தீ விபத்து சம்பவத்தை அடுத்து முதல் முறையாக கிழக்கு ஆடி வீதியில் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.