உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை

ராமநாதபுரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாயுமான சுவாமி தபோவனத்தில், தாயுமான சுவாமிகளின் குரு பூஜை, முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.ராமநாதபுரம் வெளிப்பட்டினம், லட்சுமிபுரத்தில் தாயுமான சுவாமி தபோவனம் உள்ளது. தை மாதம் விசாக நட்சத்திரத்தில் தாயுமான சுவாமி மஹா சமாதி நிகழ்ந்தது.ஆண்டு தோறும் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் தாயுமான சுவாமி குரு பூஜை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

காலை 4:30 முதல் 5:15 வரை திருப்பள்ளி எழுச்சி, தியானம், நாமாவளியும் நடந்தது.காலை 5:45 முதல் 11:45 மணி வரை தாயுமானவர் பாடல் முற்றோதல் நடந்தது. பகல் 12:00 மணிக்கு அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. பின் மதியம் 3:00 முதல் 5:45 வரை முற்றோதல், பின் தீபாராதனை, ஸ்ரீராமகிருஷ்ண ஸ்தோத்ரம், தொடர்ந்து தியானம்,நடந்தது.குருபூஜை தினமான நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்படிக லிங்கத்தின் வாயிலாக தாயுமான சுவாமிக்கு அபிேஷகம், மற்றும் பஜனை, தாயுமானவர் பாடல் சமர்ப்பணம், மகேஸ்வர பூஜை, நடந்தது. மாலை சுவாமி சாதானந்தர் தலைமையில் அருளுரை நடந்தது. பின் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளைதபோவன நிர்வாகி பரானந்தர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !