திருப்பூர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குரு பூஜை விழா
ADDED :2811 days ago
திருப்பூர் : அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருப்பூர் விஸ்வேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களில், திருநீலகண்டநாயனார் குரு பூஜை, நேற்று நடைபெற்றது. திருநீலகண்ட நாயனார். சிவ பக்தி மிக்கவர். அவரது நட்சத்திரமான நேற்று சிவாலயங்களில் குருபூஜை விழா நடந்தது. அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் காலை, 6:00 மணிக்கு, விநாயகர் பூஜை நடந்தது. தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், திரு நீலகண்ட நாயனார் மற்றும் நாயன்மார்களுக்கு, சிறப்பு அபிஷேக பூஜைகள் நடந்தன. ரிஷப வாகனத்தில், அம்பிகை உடனுறை சந்திரசேகரர், திருநீல கண்ட நாயனாருடன் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, அடியாருக்கு அமுது படைத்து பூஜை, அன்னதானம், மாலையில் சுவாமி திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு ஆகியன நடைபெற்றது. அதேபோல், திருப்பூர் விஸ்வேஸ்வரசுவாமி கோவிலிலும் குரு பூஜை நடந்தது.