சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் மண்டல பூஜை
ADDED :2868 days ago
சோழவந்தான்: சோழவந்தான் சுயம்பு சனீஸ்வர பகவான் கோயிலில் டிச., 19 சனிப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையடுத்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்தது. இதன் நிறைவு விழாவையொட்டி சுவாமிக்கு 11 வகை திரவ அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் ராமசுப்ரமணி தலைமையில் நிர்வாகிகள் செய்தனர்.