உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமயபுரத்திற்கு பாதயாத்திரை செல்லும் செம்பட்டி பக்தர்கள்

சமயபுரத்திற்கு பாதயாத்திரை செல்லும் செம்பட்டி பக்தர்கள்

வடமதுரை: சமயபுரம் மாரியம்மன் மாசித்திருவிழாவை முன்னிட்டு செம்பட்டி பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஓரே குழுவாக பாதயாத்திரை சென்றனர். சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழாவில் பங்கேற்க, திருச்சி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை செல்வர். இந்நிகழ்வு ஆண்டுக்காண்டு அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவு பக்தர்கள் செல்லத் துவங்கியுள்ளனர்.

செம்பட்டி பக்தர்கள்: செம்பட்டி, மேட்டுப்பட்டி, பழையசுக்லாபட்டி, செல்லாய்புரம், கிருஷ்ணாபுரம், பாளையங்கோட்டை, ராமசாமிபுரம் பகுதி கிராமங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஒரே குழுவாக சமயபுரத்திற்கு வடமதுரை வழியே பாதயாத்திரை சென்றனர். பாதயாத்திரை குழுவினர் கூறுகையில், ‘கடந்த 20 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் இருந்து ஓரே குழுவாக சமயபுரம் பாதயாத்திரை பயணம் செய்கிறோம்.  இதற்காக கடந்த 21 நாட்களாக விரதம் இருந்து பிப்.7-ல் பயணத்தை துவங்கினோம். பிப்.10 இரவு சமயபுரம் சென்றடைந்து, மறுநாள் அதிகாலை ஆற்றில் அம்மன் கரகம் ஜோடிப்போம். பின்னர் வழிபாடு முடித்து கரகத்தை ஆற்றில் கரைத்த பின் ஊர் திரும்புவோம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !