அப்பிச்சிமார் மடத்தில் சிவன் ராத்திரி: 13 முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED :2879 days ago
ஈரோடு: பெருந்துறை - கோபி இடையே, அப்பிச்சிமார் மடம் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலாக திகழ்கிறது. இங்கு மகாசிவ ராத்திரி விழா, வெகு விமர்சையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு சிவராத்திரி விழாவை ஒட்டி, பக்தர்கள் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம், ஈரோடு மற்றும் திருப்பூர் மண்டலம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. வரும், 13 முதல், 14 வரை, கோபி, திருப்பூர், ஈரோடு, கொடுமுடி பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.