காமலாபுரத்தில் அருளானந்தர் திருவிழா
ADDED :3103 days ago
கொடைரோடு: மெட்டூர் அருகே காமலாபுரத்தில், புனித திருமுழுக்கு அருளானந்தர் ஆலய திருவிழா நடந்தது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில், புனிதர் ரத ஊர்வலம் நடந்தது. பொங்கல் வழிபாடு, சிறப்பு திருப்பலி, கூட்டுப்பிரார்த்தனை நடந்தது. விழாவை முன்னிட்டு, கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.