இந்த வாரம் என்ன?
பிப். 10தை 28 சனி
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வரதராஜருக்கு திருமஞ்சனம்
● கருட தரிசன நாள்
பிப். 11 தை 29 ஞாயிறு
● ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி தங்கரிஷப காட்சி
● திருச்சி, ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல்
● முகூர்த்தநாள்
பிப். 12 தை 30 திங்கள்
● ராமேஸ்வரம் ராமநாதர், பர்வதவர்த்தினி முத்தங்கி சேவை
● சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
பிப். 13 மாசி 1 செவ்வாய்
● மகாசிவராத்திரி, பிரதோஷம், அனைத்து சிவாலயங்களில் அபிஷேகம்
● கோயம்புத்தூர் கோனியம்மன் பூச்சாற்றுவிழா
பிப். 14 மாசி 2 புதன்
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்
● திருவோணவிரதம்
● பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்
பிப். 15 மாசி 3 வியாழன்
● அமாவாசை. தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
● திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தெப்ப உற்ஸவம்
பிப். 16 மாசி 4 வெள்ளி
● திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் தெப்ப உற்ஸவம்
● திருச்சி ஸ்ரீரங்கம் பெருமாள் கருட சேவை.
● கோட்செங்கச் சோழ நாயனார் குருபூஜை