உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் ..

நல்லவர் இல்லம் ஒரு பல்கலைக்கழகம் ..

* சந்தனக்கட்டை மணம் பரப்புவது போல, நற்குணம் கொண்டவர்கள் வாழும் குடும்பம், கோயிலுக்கு நிகராக மதிக்கப்படும்.
* சத்தியம், நியாயம், விவேகம் ஆகிய மூன்றையும் மூச்சாக கொண்டவரிடம் சாந்தி, சக்தி, சந்தோஷம் தானாக உயரும்.
* ஆன்மிகம் இருந்தால், வாழ்க்கையில் லட்சியத்தை அடைய முடியும்.
* கொள்கைக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராகுங்கள். அப்பொழுது தான் ஆன்மிகத்தில் வெற்றி யடைய முடியும்.
* கருணையே உயர்வான குணம். குற்றத்தை மன்னிப்பதே மகத்தான சக்தி. ஆன்மிகமே மேலான செல்வம்.
* மனதில் அமைதி இருந்தால், எப்பொழுதும் ஆனந்தம் இருக்கும்.
* பணிவும், எளிய வாழ்க்கையும் கொண்ட தெய்வங்களுள் ஒருவராக மாறுவதை உணரலாம்.
* செயலும் அதற்கான விளைவும் சமமாகவும் எதிராகவும் இருக்கின்றன. எனவே யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
* உலகமாகிய கடலை தாண்டிச் செல்ல இரண்டே வழிகள் உள்ளன. ஒன்று நல்லவர் நட்பு, மற்றொன்று நல்ல நூல்கள்.
* உணர்ச்சிகளுக்கு நீங்கள் வசமாகாமல், அவற்றை உங்கள் வசமாக்குங்கள்.
* உங்களை எந்த நிலையில் கடவுள் வைத்திருந்தாலும் கவலைப்படாதீர்கள். அவரை குறை கூறாதீர்கள். உங்களை அறிந்தவர் அவர் ஒருவரே.
* ஆன்மிக வாழ்விற்கு அடிப்படை அஞ்சாமை. ஆபத்து காலத்தில் அதுவே துணை.
* மனத்தூய்மை எவ்வளவு வேகமாக அதிகரிக்கிறதோ, அவ்வளவு வேகமாக நீங்கள் கடவுளை அடைவீர்கள்.
* இரக்கம், தன்னடக்கம், வாய்மை, நேர்மை, தூய்மை, கற்புடைமை, தவம் ஆகியவை ஆன்மிக வாழ்வின் முதுகெலும்பாகும்.
* உலகத்தை உங்கள் குடும்பமாக கருதி, வருமானத்தில்  பத்து சதவீதம் வரை தர்மம் செய்யுங்கள்.
* பெயர், புகழ், பணம் எனும் ஆசைகளை விட்டால் உண்மையான அன்பை உணர முடியும். பாராட்டுகிறார் சிவானந்தர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !