மடப்புரம் கோயில் உண்டியல் எண்ணும் பணி
ADDED :2876 days ago
திருப்புவனம்: மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இருக்கன்குடி உதவி ஆணையர் வில்வமூர்த்தி தலைமையில் நடந்தது. கோயில் வளாகத்தில் உள்ள ஒன்பது உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தங்கம், வெள்ளி,வெளிநாட்டு நாணயம், பணம் உள்ளிட்ட பொருட்கள் எண்ணப்பட்டன. 19 லட்சத்து 14 ஆயிரத்து 360 ரூபாய், 177 கிராம் தங்கம், 357 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. மதுரை அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர். மடப்புரம் கோயில் உதவி ஆணையர் செல்வி தலைமையில் கோயில் ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.