ஆதிகேசவ பெருமாள் கோவில் திருப்பணி துவக்கம்
ADDED :2805 days ago
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம், அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணி துவக்க நாளில், சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. திருப்போரூர் அடுத்த, நெல்லிக்குப்பம் கிராமத்தில், 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக, அம்புஜவல்லி சமேத ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. நெல்லிக்குப்பத்தின் பழமை பொக்கிஷமாக விளங்கும் இக்கோவில், சிதிலமடைந்துள்ளது.இதை சீரமைக்க முடிவெடுத்த கிராமமக்கள், நேற்று திருப்பணியை துவக்கினர்.இதையொட்டி, பெருமாளுக்கு, சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது.ஊர் பொதுமக்கள் பலர் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.