உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் நான்கு கால பூஜை

ஊத்துக்கோட்டை சிவாலயங்களில் நான்கு கால பூஜை

ஊத்துக்கோட்டை : சிவராத்திரி விழாவை ஒட்டி, இன்று, சிவன் கோவில்களில், நான்கு கால பூஜைகள், நாட்டிய நிகழ்ச்சிகள், அரிகதை நடைபெற உள்ளது. காரணி கிராமத்தில் உள்ள காரனேஸ்வரர் கோவிலில், 3ம் ஆண்டு சிவராத்திரி விழாவை ஒட்டி, இன்று காலை, 7:00 மணிக்கு முதல் கால பூஜை, பகல், 12:00 மணிக்கு, 2ம் கால பூஜை, மாலை, 3:00 மணிக்கு, 3ம் கால பூஜை, இரவு, 9:00 மணிக்கு, 4ம் கால பூஜை, நள்ளிரவு, 12:00 மணிக்கு 5ம் கால பூஜையும், நாளை, விடியற்காலை, 4:00 மணிக்கு, ஆறாம் கால பூஜையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு பூஜையும் முடிந்த பின், சந்தனம், வெற்றிலை, விபூதி மற்றும் வென்னீர் அபிஷேகம் நடைபெற உள்ளது.

மெய்யூர் கிராமத்தில் உள்ள ஞானாம்பிகை அம்பாள் சமேத மெய்கண்டேஸ்வரர் கோவிலில், 7ம் ஆண்டு சிவராத்திரி விழாவை நடக்கிறது. இதையொட்டி, இன்று, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து கணபதி பூஜை, ஸ்வஸ்தி வாசனம், நவக்கிரக ஆராதனை, வில்வ அர்ச்சனை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாலை, 4:30 மணிக்கு பிரதோஷ விழாவும், மாலை, 6:00 மணிக்கு, லலிதா சகஸ்ரவநாமமும், குங்கும அர்ச்சனை, சுவாமிக்கு கல்யாண உற்சவம் நடைபெறும். இதேபோல், தாராட்சி லோகாம்பிகை சமேத பரதீஸ்வரர் கோவில், லட்சிவாக்கம் ஆனந்தவல்லி சமேத ஆழீஸ்வரர் கோவில், ஊத்துக்கோட்டை முனீஸ்வரர் கோவில் உட்பட பெரும்பாலான சிவன் கோவில்களில், சிவராத்திரி விழா நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !