உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேணுகோபால சுவாமி கோவிலில் மராமத்து பணிக்கு பாலஸ்தாபனம்

வேணுகோபால சுவாமி கோவிலில் மராமத்து பணிக்கு பாலஸ்தாபனம்

சத்தியமங்கலம்: வேணுகோபாலசுவாமி கோவிலில், கும்பாபிஷேக மராமத்து பணிக்காக, பாலஸ்தாபன பூஜை நடந்தது. சத்தியமங்கலம் பகுதியில், பவானி ஆற்றங்கரையோரம், 1,300 ஆண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கும்பாபிஷேகம் முடிந்து, 12 ஆண்டு முடிந்துள்ளது. இதையடுத்து அறநிலையத்துறை மற்றும் ஊர் சார்பில், கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோவிலில் மராமத்து பணிகள் தொடங்க, பாலஸ்தாபன பூஜை, நேற்று முன்தினம் நடந்தது. அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், மக்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !