சிவராத்திரியை முன்னிட்டு பனிலிங்க தரிசனம்
ADDED :2895 days ago
சிவகங்கை: சிவராத்திரியை முன்னிட்டு பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் இயக்கம் சார்பில் சிவகங்கையில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் நடந்தது. சிவன்கோயில் அருகே தனியார் மகாலில் அமர்நாத் பனிலிங்கம், தியான அறை, படவிளக்க கண்காட்சி, சிவராத்திரி மகிமை குறித்த ஒளி, ஒலி காட்சிகள் இடம் பெற்றன. அமைச்சர் பாஸ்கரன், பிரம்மா குமாரிகள் சேவை ஒருங்கிணைப்பாளர் உமா துவக்கி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்று வருகின்றனர். பனிலிங்க தரிசனம் மூன்றாம் நாளாக இன்றும் (பிப்., 13) நடக்கிறது.