உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகா சிவராத்திரி: ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

மகா சிவராத்திரி: ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்

சென்னை: சிவராத்திரியை முன்னிட்டு சென்னை, சவுக்கார்பேட்டை, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேக மஹா பூர்ணாஹுதி யாக கால பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.

பாரிமுனை, தங்கசாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் வடஇந்தியர்களால் வழிபாடு நடத்தப்படும் சிவலிங்கத்திற்கு, அதிகாலை முதல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு, தங்கள் கைகளாலேயே பாலாபிஷேகம் செய்தும், வில்வ மலர்களால் அர்ச்சித்தும் வழிபட்டனர். ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நடந்த சிவராத்திரி பூஜையில், 1008 சங்காபிஷேக மஹா பூர்ணாஹுதி யாக கால பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஹோமம் மற்றும் பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. ஏகாம்பரேஸ்வரர் ஸ்நான மண்டபங்கள் திராட்சைப்பழங்களால் அலங்கரிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !