உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்ணீர் இல்லாமல் குளியுங்க!

தண்ணீர் இல்லாமல் குளியுங்க!

மார்க்கண்டேயரின் ஆயுள் பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவருக்குரிய மரண நாள் வந்ததும், எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். மார்க்கண்டேயர் உடம்பெங்கும் திருநீறு பூசியபடி, திருக்கடையூர் சிவலிங்கத்தை கட்டியணைத்து கொண்டார்.ஆனாலும் எமன் விடாமல் துரத்தினான். சன்னதிக்குள் நுழைய முயன்ற அவனை, காலால் உதைத்து தள்ளினார் சிவன். இதன் பின், எமன் தன் துாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் வணங்கிச் செல்லுங்கள்,” என உத்தரவிட்டான். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு ’பாதுகாப்பது’ என்று பொருள். ’மந்திரமாவது நீறு’ என்னும் தேவாரம், திருநீற்றின் பெருமையை சொல்கிறது. திருநீற்றை பூசும் போது, கீழே சிந்தாமல் ’சிவாயநம’ என்று சொல்லி பூச வேண்டும். இதற்கு ’பஸ்ம ஸ்நானம்’ அல்லது ’திருநீற்று குளியல்’ என்று பெயர். இதனால் மனத்துாய்மையும், புண்ணியமும் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !