உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கவுரிசங்கருக்கு எத்தனை முகம்

கவுரிசங்கருக்கு எத்தனை முகம்

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் அசுரர்கள் பறக்கும் கோட்டைகளுக்கு அதிபதிகள். பறந்து சென்று, திடீரென ஓரிடத்தில் இறங்கி, உயிர்களை கொல்வது இவர்களின் வழக்கம். சிவன் தன் புன்னகையால் இவர்களை அழித்தார். அப்போது சிவனின் கண்ணில் வழிந்த நீர்த்துளிகள், ருத்ராட்ச விதைகளாக மாறி மரங்களாக வளர்ந்தன. வலதுபுறம் வழிந்த கண்ணீரில் 12 வகை, இடப்புறம் வழிந்த கண்ணீரில் 16 வகை, நெற்றிக் கண்ணில் 10 வகை ருத்ராட்சம் உண்டாகின. ருத்ராட்சத்திலுள்ள கோடுகளின் அடிப்படையில் முகங்களை கணக்கிடுவர். ஒன்று முதல் 16 முகம் இதில் உண்டு. ஒரு முக ருத்ராட்சத்தை சிவனாக போற்றுவர். இரு முக ருத்ராட்சம் பார்வதியுடன் கூடிய அர்த்தநாரீஸ்வர அம்சமான ’கவுரி சங்கர்’ எனப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !