இரண்டு முக்கிய தலங்கள்
ADDED :2842 days ago
காசி செல்பவர்கள், ராமேஸ்வரத்திலும் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது விதி. காசி விஸ்வநாதர் மற்றும் பிற சிவன் கோயில்களில் சிவராத்திரியன்று அபிஷேகம், ஹோமம், வேத பாராயணம் நடக்கும். ராமேஸ்வரத்தில் சிவராத்திரியன்று காலையில் திறக்கும் கோயில், மறுநாள் பிற்பகலில் தான் மூடப்படும். அபிஷேக வழிபாடு இரவு முழுவதும் நடக்கும். தேவாரம், திருவாசகம், ஸ்ரீருத்ர பாராயணம் ஒலிக்கும். இரவின் நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரம் செய்யப்படும். ஒவ்வொரு ஜாமத்திலும், சுவாமி மூன்று பிரகாரங்களிலும் உலா வருவார்.