கற்பூரத்தில் அடித்து சத்தியம் செய்ய மறுப்பது ஏன்?
ADDED :2842 days ago
சிவனின் நாட்டிய வடிவம் நடராஜர். இவர் கையில் அக்னி சட்டி ஏந்தியுள்ளார். இது ஞானத்தை குறிக்கிறது. ’உலகில் பிறந்ததே இறைவனை காண்பதற்காகத்தான், இதைத்தவிர வேறு எந்த இன்பமும் எனக்கு வேண்டாம்’ என்ற ஒருமித்த எண்ணத்துடன் சிவனை வணங்கினால், அவர் நமக்கு ஆனந்த வடிவாக காட்சி தருவார் என்பதே ஆடல் தத்துவம். அவர் கையிலுள்ள நெருப்பு, உலகத்திலுள்ள நமது சொந்த பந்தங்கள் போன்ற கட்டுகளை எரித்து, நம்மை விடுதலையடையசெய்கிறது. மேலும், ’நீ எங்கு சென்றாலும், முடிவில் இந்த அக்னிக்கு தான் இரையாவாய். நீ வாழும் காலத்தில் நன்மை செய்தால், இந்த நெருப்பு உன்னை எரிக்கும்போது ஆன்மா குளிரும், கேடு செய்தால் சுடும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. கற்பூரத்தை கொளுத்தி, அதன் மீது சத்தியம் செய் என்றால் பயப்படுகிறார்கள். காரணம் கடவுள் நெருப்பு வடிவம் என்பதால் தான்.