உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்து சிவபெருமானுக்கு 17 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரம்

குன்றத்து சிவபெருமானுக்கு 17 ஆயிரம் ருத்ராட்ச அலங்காரம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயிலில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமானுக்கு விடிய, விடிய அபிஷேகம், பூஜைகள், ஆராதனைகள் நடந்தது.  பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு 17 ஆயிரம் ருத்ராட்சங்களால் அலங்காரமானது. சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்திய கிரீஸ்வரருக்கு மாலை 5:30 முதல் இரவு 12:30 மணிவரை நான்கு கால பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது.

சன்னதி தெருவிலுள்ள சொக்கநாதர் கோயிலில் எழுந்தருளியுள்ள சிவ பெருமானுக்கு இரண்டு கால பூஜைகள்,  அபிஷேகங்கள் நடந்தது.  மலைமேலுள்ள காசி விஸ்வநாதர், கீழரத வீதியில் எழுந்தருளியுள்ள குருநாத சுவாமிக்கு இரண்டு கால அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது. லைக்குப்பின்புறமுள்ள பால் சுனை கண்ட சிவபெருமானுக்கு ஐந்து கால பூஜைகள் முடிந்து ருத்ராட்ச அலங்காரத்தில் அருள்பாலித்தார். விளாச்சேரி ஈஸ்வரன் கோயிலில் காசி விஸ்வநாதர் சமேத விசாலாட்சிக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.  திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் தனி சசன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதருக்கு விடிய விடிய நான்கு கால யாகசாலை பூஜைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !