பிரசாந்தி நிலையத்தில் சிவராத்திரி
ADDED :2796 days ago
அனந்தபூர்: சிவராத்திரியை முன்னிட்டு ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சத்ய சாய் பிரசாந்தி நிலையத்தில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம் ஆராதனை நடந்தது. முன்னதாக சிவலிங்கத்திற்கு பால்,தயிர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் நெய்வேத்தியம், மங்கள ஆரத்தியும் நடந்தது. வேத மந்திரங்களுடன் பக்தர்கள் பஜனை பாடி சிவராத்திரியி்ல் கலந்து கொண்டனர்.