உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சக்தி கரகம் அழைப்பு: தங்க கவசத்தில் அம்மன்

சக்தி கரகம் அழைப்பு: தங்க கவசத்தில் அம்மன்

ஓமலூர்: சக்தி கரகம் அழைத்தல் விழாவில், தங்க கவசத்தில் அம்மன் அருள்பாலித்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு, ஓமலூர், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் கொடியேற்றம் நடந்தது. நேற்று காலை, ஓமலூர் பைபாஸ் பாலம், சரபங்கா ஆறு அருகே, சிங்கவாகனத்தில் அம்மனை, சக்தி கரகம் அழைத்து வந்து, கிழங்கு உள்ளிட்ட பலகார வகைகள் கொண்டு படையலிட்டு, வழிபாடு செய்தனர். தொடர்ந்து, தங்க கவசம் சாத்துபடி செய்யப்பட்டது. இன்று மதியம், 12:00 மணிக்கு, அம்மன், அகோர ரூபத்தில் மயான சூறையாடி, கோவிலுக்கு, ஊர்வலம் வரும் விழா நடக்கவுள்ளது. நாளை இரவு, 10:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !