மாதேஸ்வரன் மலை கோவிலுக்கு ரூ.27 லட்சத்தில் தேர்
ADDED :2887 days ago
சேலம்: மேட்டூர், மாதேஸ்வரன் மலை கோவிலில், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்துவர். இங்கு, 27 லட்சம் ரூபாய் மதிப்பில், மரத்தேர் வடிவமைக்கப்பட உள்ளது. பூம்புகார் விற்பனை நிலையம் மூலம், கலை நுணுக்கத்துடன், தேர் பணியை, விரைவில் துவங்க உள்ளனர்.