சஞ்சீவி நகரில் பால் குட ஊர்வலம்
ADDED :2785 days ago
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு : புதுநகர் குறத்தி பரமேஸ்வரி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, இன்று 15ம் தேதி, பால் குட ஊர்வலம் நடக்கிறது. திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த சஞ்சீவி நகர் புதுநகரில் குறத்தி பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 15ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, இன்று நடக்கிறது. விழாவை முன்னிட்டு, அதிகாலையில், மகா யாகசாலை பூஜை நடக்கிறது. இதைதொடர்ந்து, காலை 9:00 மணிக்கு, சஞ்சீவி நகர் கெங்கையம்மன் குளக்கரையில் இருந்து பால் குட ஊர்வலமும், குறத்தி பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு, அம்மன் வீதியுலா நடக்கிறது.பால் குடம் எடுக்க வரும் பக்தர்கள் அனைவரும் மஞ்சள் உடை மற்றும் சிவப்பு உடை அணிந்து வருமாறு, கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.