தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு
ADDED :2835 days ago
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பல் புதனையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதையொட்டி விருதுநகர் துாய இன்னாசியார் ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் அம்புரோஸ் ராஜ், துணைப்பாதிரியார் ஜான்பால் ,பாண்டியன் நகர் துாய சவேரியர் ஆலயத்தில் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எப்.எஸ். மேல்நிலைப் பள்ளி முதல்வர் அருள் பிரான்சிஸ், பொருளாளர் ஜெயராஜ், சிவகாசி ஆற்றுப்பாலம் அருகே உள்ள நிறைவாழ்வு நகர் துாய ஜெபமாலை அன்னை ஆலயத்தில் பாதிரியார் தாமஸ் வெனிஸ் ,ஆர்.ஆர். நகர் துாய வேளாங்கண்ணி அன்னை ஆலயத்தில் பாதிரியார் பெனடிக்ட் பர்ணபாஸ் தவக்காலத்தை தொடங்கி வைத்தனர். அதை தொடர்ந்து திருப்பலி , மறையுரை நடந்தது.