உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திருமலைக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திருப்பதி: திருமலை தேவஸ்தானத்தின் மருத்துவ அறக்கட்டளைக்கு, ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கப்பட்டது. திருப்பதி, திருமலை தேவஸ்தானம், ஏழுமலையான் பெயரில், பல்வேறு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு பக்தர்கள், பல லட்சம் ரூபாய்களை நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதில் ஒன்றான, ’பர்ட்’ மருத்துவ அறக்கட்டளைக்கு, மதுரையை சேர்ந்த, டி.வி.எஸ்., ஸ்ரீசக்கரா டயர்சின் இயக்குனர், ஷோபா ராமசந்திரன், ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார். அதற்கான வரைவோலையை, அவர், திருப்பதியில் உள்ள தேவஸ்தான செயல் இணை அதிகாரி அலுவலகத்திற்கு சென்று நேற்று காலை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !