பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
பரமக்குடி:பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் புதிய மரத்தேர் கும்பாபிேஷகம், வெள்ளோட்டம் மார்ச் 4 ல் நடக்கவுள்ளது.பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனித் திருவிழாநடப்பது வழக்கம். முக்கிய நிகழ்வாக விழாவில் 9 ம் நாள் இரவு மின்சார தீப தேரோட்டம் நடக்கும். இதற்கு முன் 180 ஆண்டு பழமை வாய்ந்ததேர் கடந்த வருடம் வரை ஓடியது. இந்த வருடம் புதிய தேர்திருப்பணி கடந்த சில மாதங்களாக நடந்துவருகிறது. மேலும் திருச்சி பெல் நிறுவனத்தில் இருந்து இரும்பு சக்கரங்கள்பொருத்தும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கான யாகசாலை பூஜைகள் மார்ச் 2 ல் மாலை 6:00 மணிக்குமீனாட்சி அம்மன் கோயிலில் விநாயகர் வழிபாடுடன் துவங்கும். இரவு 8:00மணிக்கு முத்தாலம்மன் கோயிலில் அனுக்கை, மறுநாள் காலை 7:00 மணிக்குகணபதி ஹோமம், முத்தாலம்மன் அபிேஷகம் நடக்கவுள்ளது.
மாலை 4:00 மணிக்கு முதல்கால யாகபூஜையும், மார்ச் 4 ல் அதிகாலை 4:00 மணிக்கு இரண்டாம் காலயாகபூஜை, பூர்ணாகுதிக்குப் பின், கடம் புறப்பாடாகி கோயிலைவலம் வந்து, காலை 9:00 மணிக்கு புதிய மரத்தேருக்கு மகாஅபிேஷகம் நடக்கும்.தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு மேல் திருத்தேர் வெள்ளோட்டம் நான்கு மாடவீதி களில் நடக்கவுள்ளது. இரவு 8:00 மணிக்கு அன்னதானமும், கோயில் முன்பு இன்னிசை கச்சேரியும் நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள், ஆயிர வைசிய சபையினர் செய்து வருகின்றனர்.