உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா

முருகய்யனார் கோயிலில் மகா சிவராத்திரி விழா

நரிக்குடி, நரிக்குடி வீரக்குடி முருகய்யனார் கோயிலில் மாசி மகாசிவராத்திரி விழா கடந்த 10 அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம் தீபாராதனைகள் நடந்தது. மறுநாள் சுவாமி வீதி உலா வருதல், கணபதி ேஹாமம், ருத்ரா அபிேஷகம், சங்கா பிேஷகம், பச்சை வாழை பரப்புதல் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் வள்ளி தெய்வானை சமேத கரைமேல் முருகன் சர்வ அலங்கராத்துடன் சுவாமி புறப்பாடு நடந்தது. நேற்று மதியம் ஒரு மணிக்கு மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் குழுத் தலைவர் செல்வராணி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !