உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல நேரத்திற்காக பிரசவத்தை தள்ளி வைத்தவர்!

நல்ல நேரத்திற்காக பிரசவத்தை தள்ளி வைத்தவர்!

குழந்தை பிறப்பதற்காக நேரத்தை தள்ளிப்போடுவது, குறிப்பிட்ட நட்சத்திர நாளில் ஆப்பரேஷன் செய்து பிரசவிப்பது என்பது இப்போது தான் என  நினைக்காதீர்கள். புராண காலத்திலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சோழநாட்டை சுபதேவ மன்னர் ஆண்டு வந்தார். இவரது மனைவி  கமலவதி. இந்த அம்மையாருக்கு பிரசவ வலி ஏற்பட்டு துடித்துக் கொண்டிருந்தார். அப்போது அரண்மனை ஜோதிடர்கள், அம்மா! உங்களுக்கு  இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்து விடும். நீங்கள் ஒரே ஒரு நாழிகை (24 நிமிடம்) வலி பொறுத்து, குழந்தை பிறக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது நல்ல நேரம் பிறக்கிறது. அந்த நேரத்தில் பிள்ளை பிறந்தால் உலகம் போற்றும் உத்தமனாக அமைவான்,” என்றனர்.

அந்தப் புனிதத்தாய் அவ்வளவு கஷ்டத்திலும் எழுந்தாள். ஒரு கயிறை எடுத்து வரச் சொல்லி தன்னை தலைகீழாக ஒரு நாழிகை வரை  கட்டிப்போடச் சொன்னாள். அரசி சொன்னபடியே செய்தனர். தலைகீழாக தொங்கிய அந்த புண்ணியவதியை நல்ல நேரம் வந்ததும் அவிழ்த்து  விட்டனர். குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தான் சிவபக்தரான கோச்செங்கட்சோழ நாயனார். நாயன்மார் வரிசையில் இடம் பெற்று, சிவன்  கோயில்களில் நாயன்மார் சன்னதியில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !