உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகிரி கூடலூர் மாரியம்மன் கோவிலில் 25ல் பூச்சாட்டுதல்

சிவகிரி கூடலூர் மாரியம்மன் கோவிலில் 25ல் பூச்சாட்டுதல்

கொடுமுடி: சிவகிரியில் உள்ள, கூடலூர் மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, வரும், 25ல் பூச்சாட்டுதல், கம்பம் நடுதலுடன் தொடங்குகிறது. பிப்.,26ல் மஹா தீபாராதனை, 27ல் அம்மன் ஊர்வலம், 28ல் சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா, பூ ஊஞ்சல் நடக்கிறது. மார்ச், 1ல் பொங்கல் வைபவம் நடக்கிறது. அன்று அதிகாலை, காவிரி தீர்த்தம் எடுத்து வருதல், அக்னி கும்பம், தீர்த்த ஊர்வலம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடக்கிறது. இதைதொடர்ந்து அன்னதானம் நடக்கிறது. அன்றிரவே, கம்பம் விடுதல், நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச், ?ல் மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !