உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குளித்தலை: கடம்பர்கோவில் மாசி மகம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. குளித்தலை, கடம்பர்கோவில் முற்றிலாமுலையம்மை உடனுறை கடம்பவனேஸ்வரர் கோவில், மாசிமகப் பெருந்திருவிழா நேற்று காலை, 10:30 மணியளவில், காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி சுவாமிக்கு, அபிஷேகம் ஆராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில், கோவில் இ.ஓ., வேல்முருகன், இந்து சமய அறநிலைய துறை அலுவலர்கள் பலர் மற்றும் குளித்தலை சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சிவனடியார்கள் கலந்து கொண்டனர். இரவு, மஞ்ச கேடய வாகனத்தில், சுவாமி திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !