மாகாளியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :2800 days ago
ஈரோடு: மாகாளியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு, சூரம்பட்டியில் எழுந்தருளியுள்ள, மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் காலை, சிறப்பு அபி?ஷகம், அலங்காரம், மஹாதீபாராதனை நடந்தது. தொடர்ந்து, அம்மன் முத்து பல்லக்கு வீதியுலா, காவிரிக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள், ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி, பாரதி நகர், என்.ஜி.ஓ., காலனி உள்ளிட்ட மாநகரின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று, மறு பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.