கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார விழா
ADDED :3158 days ago
புதுச்சேரி: கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹார உற்சவம் நேற்று நடந்தது. கதிர்காமம் கதிர்வேல் சுவாமி கோவிலில் சூரசம்ஹர உற்சவ விழா கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹார உற்சவம் நேற்று நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 8.00 மணிக்கு ஆட்டுகிடா வாகனத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. மயில்வானத்தில் சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.