அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னை பிறந்த தினம்
ADDED :2854 days ago
புதுச்சேரி: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில், அன்னையின், 140வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள், அன்னையின் சமாதியில் மலர் துாவி வழிபட்டனர்.அன்னையின் இயற்பெயர்மிர்ரா அல்போன்சா. பிரான்ஸ் தலைநகர் பாரீசில், 1878 பிப்., 21ல் பிறந்தார். அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, 1914ல் புதுச்சேரி வந்தார். அரவிந்தர் ஆசிரமமும், ஆரோவில் சர்வதேச நகரமும், அன்னையால் உருவாக்கப்பட்டன.