பழநி மலைக்கோயில் பூஜை மணி பழுது!
ADDED :5038 days ago
பழநி:பழநி மலைக்கோயிலில் நான்கு கால பூஜை (காலை 7 மணி விளா, மதியம் 12 மணி உச்சிகாலம், மாலை 5.30 மணி சாயரட்சை, இரவு 8.30 மணி ராக்காலம்) களின்போது, வெளிப்பிரகாரத்தில் உள்ள மரத்தாலான மணி பயன்படுத்தப்பட்டு வந்தது. ஈரோடு பக்தர் ஒருவரின் உபயத்தால், பத்து ஆண்டுகளுக்கு முன், வெண்கலம், பித்தளை கலந்த மணி பொருத்தப்பட்டது. அதன்பின், உபய மணி மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று மாலை சாயரட்சை பூஜையின்போது, இந்த உபய மணி பயன்படுத்தப்படவில்லை. மாறாக, மரத்தாலான மணி மூன்று முறை அடிக்கப்பட்டது. ஊழியர் ஒருவர் கூறுகையில், "உபய மணியின் மேல்சுருள் பகுதியில் பழுது ஏற்பட்டுள்ளது. முழுமையாக சுழல முடியாமல், ஒலி எழுப்புவதில் பிரச்னை உள்ளது. எனவே, மரத்தாலான மணி பயன்படுத்தப்படுகிறது, என்றார்.