காரமடை அரங்கநாதர் கோவிலில் கொடியேற்றம்
ADDED :2886 days ago
மேட்டுப்பாளையம்: கோவையில் மிகவும் பிரசித்தி பெற்றது, காரமடை அரங்கநாதர் கோவில். கோவிலில், மாசிமகத் தேரோட்டம், மார்ச் 1ல் நடக்கிறது. இதற்கான விழா, இன்று மதியம், 12:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முன்னதாக நேற்று கிராம சாந்தி பூஜை நடந்தது. வரும், 26ம் தேதி வரை, தினமும் சுவாமி வீதியுலா நடக்கிறது. தொடர்ந்து, காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடக்கின்றன. மார்ச் 1ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.