உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னகேசவ பெருமாளுக்கு புஷ்ப யாக மகோற்சவ விழா

சென்னகேசவ பெருமாளுக்கு புஷ்ப யாக மகோற்சவ விழா

தர்மபுரி: தர்மபுரி, குமாரசாமிபட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சென்னகேசவ பெருமாளுக்கு, வரும், 26ல், மூன்று டன் மலர்களை கொண்டு புஷ்ப யாக மகோற்சவ விழா நடக்கிறது. இதையொட்டி, வரும், 25 மாலை, 6:00 மணிக்கு, சென்னகேசவ பெருமாள் சன்னதியில் சூடிக்கொடுத்த சுடர்கொடியாளுக்கு சிறப்பு பூஜை, இரவு, 7:00 மணிக்கு சூடிக்கொடுத்த மாலை திருவீதிஉலா வர, தங்கையான மாரியம்மன், சீர்கொடுத்து விழாவிற்கு அழைத்தல் நடக்கிறது. வரும், 26ல் பீஷ்ம ஏகாதசியை முன்னிட்டு, அதிகாலை, 5:00 மணிக்கு லட்சார்சனை சிறப்பு அபிஷேகம், 6:00 மணிக்கு குங்குமஅர்ச்சனை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் மந்திரம் முழங்க, 18 வகையான சுகந்த பரிமள வாசனை கொண்ட, மூன்று டன் மலர்கள் கொண்டு, சென்ன கேசவ பெருமாளுக்கு, கோமாதா - ராஜஅஸ்வம் பூஜையுடன் புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது. இந்த மகோற்சவ பூஜைகளில் பங்கேற்றால் திருமணத்தடை, புத்திரபாக்கியம், ராஜ வாழ்க்கை பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !