உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா : மார்ச்2ல் தெப்ப உற்சவம்

திருக்கோஷ்டியூர் தெப்பத்திருவிழா : மார்ச்2ல் தெப்ப உற்சவம்

திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு மார்ச் 2 ல்  பகல் மற்றும் இரவில் தெப்பம் திருக்குளத்தில் வலம் வருகிறது.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் 108 வைணவத்தலங்களுல் முதன்மையானது. இங்கு மாசித் தெப்ப உற்சவம் 11நாட்கள் நடைபெறும்.  அதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்க பெருமாள் தேவியருடன் சர்வ அலங்காரத்தில் கருங்கல் மண்டபம் எழுந்தருளினார். தொடர்ந்து கொடிப்படம், சக்கரத்தாழ்வார் திருவீதி உலா நடந்தது. பின்னர் கொடிமரத்திற்கு பூஜைகள் நடந்து காலை 9.50 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. அடுத்து கொடிமரத்திற்கு அபிேஷக,ஆராததைனகள் ந டந்தன.

பிப்.,20 மாலை 5:30 மணி அளவில் சேனை முதல்வர் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து  முதலாம் திருநாளான பிப்.,21ல் காலை 6:00 மணிக்கு மேல் பெருமாள் தேவியருடன்திருநாள் மண்டபம் எழுந்தருளலும்,  காலை 10:00 மணிக்கு கொடியேற்றத்துடன்  உற்சவம் துவங்கியது.  இரவில்  தங்கப்பல்லக்கில் தேவியருடன் பெருமாள் திருவீதி  உலாவும் நடந்தது. தொடர்ந்து தினசரி காலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும்,  இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஆறாம் திருநாள் பிப்.,26 இரவில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதலும், இன்று மாலையில் பெருமாளுக்கு பொற்காசுகளால் அபிேஷகமும், மார்ச் 1 காலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல், இரவில் வெண்ணைத்தாழி கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் காட்சிதருதலும், மார்ச் 2ல் பகல் 12:45மணி அளவில் பகல் தெப்பமும், இரவில் 10:00 மணிக்கு  தெப்பம் வலம் வருதலும் நடைபெறும். மார்ச்3ல்  காலையில் தெப்பக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், இரவில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும். பெண்கள் கோயிலிலும், தெப்பக்குளத்திலும் தீபம் ஏற்றி தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற பெருமாளை பிரார்த்திப்பது இந்த உற்சவத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும். நேற்று முதல் பெண்கள் தீபம் ஏற்றி வழிபடத்துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !