உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண வைபவம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில், சுக்கிரன் வீதியுலா நடந்தது. திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங்கியது. விழாவின் 7ம் நாளான நேற்று காலை7:00 மணிக்கு அசுரகுரு பார்க்கவன் எனப்படும் சுக்ரன் சிறப்பு திருமஞ்சனம் அலங்காரம் வீதியுலா நடந்தது. மாலை 7:00 மணிக்கு சிவானந்தவல்லி சமேத வீரட்டானேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இரவு சுவாமி முத்துப்­பல்லக்கில் வீதியுலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை காலை 9:00 மணிக்கு தேரோட்டம் துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !