உற்சவ மண்டபத்திற்கு உயிரூட்டம்
ADDED :2888 days ago
திம்மராஜம்பேட்டை : உற்சவ மண்டபத்திற்கு, நேற்று உயிர் ஊட்டும் பணி துவங்கியது. நாளை மாசி மக திருவிழா நடைபெற உள்ளது.வாலாஜாபாத் ஒன்றியம், திம்மராஜம்பேட்டை கிராமத்தில், பர்வதவர்த்தினி சமதே ராமலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு, மாசி பவுர்ணமி தினத்தில் மக திருவிழா நடைபெறும். அப்போது, உற்சவர் தற்காலிக மண்டபத்தில் எழுந்தருளி வந்தார்.தற்காலிக மண்டபத்திற்கு பதிலாக, நன்கொடையாளர்களின் உதவி யுடன், புதிய உற்சவ மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.அதற்கு நேற்று காலை, 9:30 மணியளவில் கணபதி பூஜையுடன், உற்சவ மண்டபத்திற்கு உயிர் ஊட்டப்பட்டது.நாளை நடைபெற உள்ள மாசி மகத் திருவிழாவில், பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வர் புதிய உற்சவ மண்டபத்தில் எழுந்தருளி காட்சிஅளிக்க உள்ளார்.