உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்

வரதராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக கோலாகலம்

தலைவாசல்: தலைவாசல் அருகே விநாயகர், மாரியம்மன் கோவில்களுக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. தலைவாசல், சார்வாய்புதூர் ஏரிக்கு அருகில், கருப்பையா, பொன்னியம்மன், அய்யனார் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கோவில்கள் உள்ளன. மேலும், ஊருக்குள் சக்தி மாரியம்மன், விநாயகர், சமேத வரதராஜ பெருமாள் கோவில்கள் புதிதாக கட்டப்பட்டன. இவை அனைத்திற்கும் கும்பாபி?ஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மதியம், தீர்த்தக் குடங்களுடன், முளைப்பாரி கொண்டு வரப்பட்டது. இரவு சுவாமி சிலைகள் கிரிவலம் எடுத்து வரப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை, கணபதி ?ஹாமத்துடன் விழா தொடங்கியது. பின்னர், செல்வ கணபதி. சக்தி மாரியம்மன் கோவில்களுக்கு கும்பாபி?ஷகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ தேவி, பூ தேவி, சமேத வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், அய்யனார், கருப்பையா, பொன்னியம்மன் கோவில் களுக்கும், கும்பாபி?ஷகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !