மதுரை மீனாட்சி கோயிலில் அலைபேசிக்கு தடை
ADDED :2815 days ago
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பிப்.,2ல் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராய மண்டபத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மத்திய பாதுகாப்பு படையினர் ஆய்வு நடத்தினர். பாதுகாப்பு கருதி கோயிலில் அலைபேசியை பயன்படுத்த தடை விதிக்க ஆலோசனை வழங்கியது. இதன்படி மார்ச் 3 முதல் கோயிலுக்கு அலைபேசியை கொண்டு வர கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. தவிர்க்க இயலாத காரணங்களால் அலைபேசியை கொண்டு வருவோர் வடக்கு, மேற்கு கோபுர வாசல் நுழைவு பகுதியில் கட்டணம் செலுத்தி வைத்து விட்டு செல்லலாம். இதில் 1,000 அலைபேசிகள் பாதுகாக்கப்படும். ஒன்றுக்கு 10 ரூபாய் கட்டணம்.