நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கும்பாபிேஷகம்
ADDED :2814 days ago
பெ.நா.பாளையம்; நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள மகாலட்சுமி சமேத குருநாஸ்வாமி, குருவம்ம, சித்தம்ம, சென்னய்ய, சென்னம்ம, சித்தம்ம, ஸ்ரீ முத்து விநாயகர் கோவில் கும்பாபிேஷக விழா நடந்தது.விழாவையொட்டி, முதல் நாள் மகா சங்கல்பம், வேத திவ்யப்ரபந்த துவக்கம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன. இரண்டாம் நாள் கலச ஸ்தபானம், இரண்டாம் கால யாகங்கள், மகாலட்சுமி விக்ரகத்துக்கு பஞ்சகவ்ய சுத்தி பூஜை, 108 கலச அபிேஷகம், சகஸ்ரநாம அர்ச்சனை, பிரசாத வினியோகம் ஆகியன நடந்தன. மூன்றாம் நாள் காலை விஸ்வரூபம், சாந்தி ேஹாமம், விமான கோபுரங்களுக்கு அபிேஷகம் ஆகியன நடந்தன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.