உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.  விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் பிரதோஷ நந்திக்கு நேற்று மாலை 5:00 மணியளவில் நந்தீஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், தேன், திரவியபொடி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் ஆராதனை செய்து; அருகம்புல், மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மகாதீபாராதனை நடந்தது. அதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.  அதேபோல், நல்லுார் வில்வவனேஸ்வரர் கோவில், முதனை முதுகுன்றீஸ்வரர் கோவில், தே.கோபுராபுரம் ஆதிசக்தீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !